நாடு முழுவதும் ஏழை எளிய மக்கள் பயனடையும் வகையில் அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி விதவைப் பெண்களின் வாழ்க்கைக்கு விதவை பென்ஷன் என்ற திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலமாக கணவனை இழந்த பெண்களுக்கு மாதம்தோறும் அரசு ஓய்வூதியம் வழங்கி வருகிறது. இந்த திட்டத்தில் 18 முதல் 65 வயது வரை உள்ள விதவைகள் விண்ணப்பிக்க முடியும்.

இதற்கு விண்ணப்பிக்க விதவைகள் வறுமை கோட்டிற்கு கீழே இருப்பதற்கான ஆதாரங்களை வழங்க வேண்டும். மேலும் அவர்களுக்கு குழந்தைகள் இருந்தால் அந்த குழந்தைக்கு 25 வயது வரை இந்த திட்டம் செல்லுபடி ஆகும். அதுவே விதவைப் பெண்ணுக்கு மகள் இருந்தால் அவருக்கு 65 ஆண்டுகள் வரை ஓய்வூதியம் வழங்கப்படும். இதற்கு முன்னதாக இந்த திட்டத்தில் 1400 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 1500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.