இந்தியாவில் அனைத்து தரப்பு மக்களும் பயனடையும் வகையில் பல்வேறு சிறுசேமிப்பு திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. தற்போது சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர்த்தப்பட்டதால் சிறு சேமிப்பு திட்டங்கள் மீதான மக்களின் ஆர்வமும் அதிகரித்துள்ளது. அதனால் சிறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்ய சில விதிமுறைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதாவது சிறுசேமிப்பு திட்டங்களில் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் முதலீடு செய்பவர்கள் வருமானச் சான்று கட்டாயமாக வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

மேலும் தீவிரவாதம் மற்றும் பண மோசடி போன்றவற்றிற்கு சிறுசேமிப்பு திட்டங்களை தவறாக பயன்படுத்துவதால் கேஒய்சி விதிமுறைகளை மத்திய அரசு கடுமையாக அமல்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் சிறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வோம் ரிஸ்க் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவருமே கட்டாயம் வருமானச் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.