மத்திய இடைநிலை கல்வி வாரியம் ஆன சிபிஎஸ்இ வருகின்ற ஜூலை மாதத்திற்குள் தனது சொந்த டிவி சேனலை கொண்டு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நேற்று நடைபெற்ற சிபிஎஸ்இ பள்ளிகளின் தலைவர்களுடன் நடந்த கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதேசமயம் 2022 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கு கலப்பு கற்றல் அணுக்களை வழங்குவதற்காக ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 200 தொலைக்காட்சி சேனல்களை கல்வி அமைச்சகம் தொடங்கும் என்று அறிவித்திருந்தார்.

அதேசமயம் கல்வியை டிவி சேனல் மூலமாக அணுகினால் தான் அனைத்து மக்களையும் சென்றடையும் எனவும் டிவி, வானொலி மற்றும் பிற ஊடகங்கள் மூலமாகவும் இணையத்தில் மட்டுமல்லாமல் கலப்பு கற்றலையும் நாங்கள் மிகவும் உன்னிப்பாக கவனிப்போம் என்று தெரிவித்த அவர் ஜூலை மாதத்திற்குள் இது அமலுக்கு வரும் என்று தெரிவித்துள்ளார்.