விண்வெளிக்கு செல்வது என்பது இப்போது மிகவும் எளிதாகி விட்டது. ஆனால் அங்கு செல்பவர்கள் சிலரும் இறக்கும் சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது. வருகின்ற 2025 ஆம் ஆண்டு நாசா நிலவுக்கு ஒரு குழுவையும் 2030 ஆம் ஆண்டு பிறகான பத்து ஆண்டுகளில் செவ்வாய்க்கு ஒரு குழுவையும் அனுப்ப திட்டமிட்டுள்ளது. விண்வெளியில் இருக்கும் போது யாராவது உயிரிழந்து விட்டால் அவரின் உடல் என்ன ஆகும் என்று பலருக்கும் கேள்வி இருக்கலாம். பூமியை ஒட்டிய விண்வெளி மையத்தில் யாராவது உயிரிழந்து விட்டால் விண்வெளியில் உள்ள குழு சில மணி நேரத்தில் அந்த உடலை கேப்ஸ்யூலில் சில மணி நேரத்தில் பூமிக்கு கொண்டுவரப்படும். அதேசமயம் ஒருவர் நிலவில் இறந்து விட்டால் அவர் சில நாட்களில் பூமிக்கு கொண்டுவரப்படுவார்.

மிக விரைவில் பூமிக்கு உடலை கொண்டு வருவதால் அதனை பதப்படுத்த வேண்டிய நிலை இருக்காது. ஆனால் 300 மில்லியன் மயில் தூரம் பயணம் செய்து செவ்வாய் கிரகத்தை அடைந்த பிறகு ஒருவர் உயிரிழந்தால் அந்த குழு பூமிக்கு உடலை கொண்டு வந்து விட்டு திரும்ப செல்வது மிகவும் கடினமாகும். அவ்வாறான சூழலில் அந்த உடலை பிரத்தியேகமான பையில் அல்லது அறையில் பதப்படுத்தி அவர்களின் மிஷினை முடிந்துவிட்ட பூமிக்கு திரும்பும் போது கொண்டு வருவார்கள். இவை வானூர்தி அல்லது வானூர்தி நிலையத்தில் உயிரிழப்பவர்களுக்கு பொருந்தும்.

இதுவே ஒருவர் போதிய பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் இல்லாமல் வானூர்திக்கு வெளியில் சென்றால் வெற்றிடம், உயர் அழுத்தம் மற்றும் போதிய ஆக்சிஜன் இல்லாத காரணத்தால் மூச்சு திணறல் மற்றும் ரத்த கொதிப்பால் உயிரிழந்து விடுவார். அப்படி உயிரிழந்து விட்டால் எரிக்கக் கூடாது ஏனென்றால் இதற்கு அந்த குழு நீண்ட நாள் உபயோகப்படுத்தும் ஆற்றல் தேவைப்பட வேண்டி இருக்கும். அதனைப் போலவே புதைத்து விட்டால் உடம்பில் தோன்றும் பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகள் அந்தக் கோளை மாசுபடுத்தி விடும். இதனால் ஒரு பையில் பதப்படுத்தி வைத்து அதன் பிறகு பூமிக்கு கொண்டு வருவார்கள்.