தமிழகத்தில் விடுமுறைக்கு இனி களஞ்சியம் செயலி மூலமாகவே அரசு ஊழியர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என தமிழக அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும் துறை ரீதியாக உத்தரவு அனுப்பப்பட்டுள்ளது.

அதில் கருவூலங்கள் மற்றும் கணக்குகள் துறை உருவாக்கிய களஞ்சியம் செயலியை அனைத்து அரசு ஊழியர்களும் தங்கள் மொபைல் போனில் பதிவிறக்கம் செய்து இனி விடுமுறை மற்றும் சம்பள முன் பணத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும் என அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.