தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் நாளில் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதனைப் போல தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தனியார் நிறுவனங்களும் ஏப்ரல் 19ஆம் தேதி ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என்ற தமிழ்நாடு அரசு தொழிலாளர் நலத்துறை உத்தரவிட்டுள்ளது. அன்றைய தினம் ஊதியத்துடன் பொது விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.