வெற்றிமாறன் டைரக்டில் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடித்து வெளியான படம் விடுதலை முதல் பாகம். இந்த படத்தில் பவானி ஸ்ரீ, கவுதம் மேனன், ராஜிவ் மேனன் உட்பட பல நட்சத்திரங்களும் நடித்திருந்தனர். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த படம் சூப்பர்ஹிட் ஆனது. இதையடுத்து விடுதலை 2-ஆம் பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் நடப்பு ஆண்டு விடுதலை படத்தின் 2-ஆம் பாகம் வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில், திடீரென்று அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இப்போது கதையில் சில திருத்தங்களை செய்திருப்பதால் மீண்டும் 50-60 நாட்கள் வரை படப்பிடிப்பு நடக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இத்திரைப்படத்திற்கான வேலைகள் நீண்ட நாட்கள் செல்லும் என கூறுகிறார்கள். ஆகவே கண்டிப்பாக நடப்பு ஆண்டு விடுதலை-2 வெளியாவது சந்தேகம் என தெள்ளத்தெளிவாக தெரிகிறது. இச்செய்தி விடுதலை 2-ஆம் பாகத்தை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது.