மும்பையில் நேற்று நடைபெற்ற ஒரு பரிதாபகரமான சாலை விபத்தில், 17 வயது சிறுவன் ஓட்டிவந்த மஹிந்திரா ஸ்கார்பியோ கார், அதிகாலை 4:30  மணி அளவில் பால் கொண்டு சென்ற இருசக்கர வாகனத்தில் மோதியதில், இருசக்கர வாகன ஓட்டி நவின் வைஷ்ணவ் (24) உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்தை ஏற்படுத்திய சிறுவன், விபத்துக்குப் பிறகு காரை விட்டு இறங்கி தப்பியோட முயற்சி செய்தான். இருப்பினும், பொதுமக்கள் மற்றும் போலீசார் இணைந்து அந்த சிறுவனை பிடித்துள்ளனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், அந்த கார் இக்பால் ஜிவானி (48) என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்துள்ளது. அந்த சிறுவன் கார் ஓட்டுநராக வேலை செய்து வந்ததுள்ளார். இந்த விபத்து தொடர்பாக இக்பால் ஜிவானி மற்றும் அவரது மகன் முகமது ஃபஸ் (21) ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.