நடிகர் விஜய் ஜெயலலிதாவின் கோடநாடு பங்களா முன்பாக தலைவா படம் ரிலீஸ் ஆகவேண்டும் என்பதற்காக கைகட்டி நின்றார் என்று பல அரசியல் கட்சிகள் விமர்சித்து வருகிறது. இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தற்போது விஜயின் தந்தை எஸ் ஏ சந்திரசேகரன் பேசியுள்ளார்.
இது தொடர்பாக ஒரு பேட்டியில் கூறியதாவது, நடிகர் விஜய் தலைவா படம் நாங்கள் யாரையும் குறிப்பிட்டோ அல்லது தனியாக விமர்சித்தோ எடுக்கவில்லை. இந்த படம் ரிலீஸ் ஆகாமல் இருப்பதால் தயாரிப்பாளர் மிகுந்த வருத்தத்தில் இருக்கிறார் எனவே தற்போதைய முதலமைச்சர் அவர்கள் இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வீடியோ வெளியிட்டு இருந்தார்.
மற்றபடி அவர் ஜெயலலிதாவை சந்திக்கவே இல்லை. இது பற்றி ஒரு பேட்டி கூட அவர் கொடுக்கவில்லை. ஜெயலலிதா அம்மையார் தான் என்னை அழைத்து பிரச்சாரம் செய்ய வேண்டும் எனக் கூறி 40 தொகுதிகளை எனக்கு ஒதுக்கினார். நானும் அவர் சொன்னபடி பிரச்சாரம் செய்தேன். மக்கள் இயக்கம் உதவ வேண்டும் என்று ஜெயலலிதா என்னிடம் கேட்டுக் கொண்ட நிலையில் அப்போது கூட விஜய் எந்த ஒரு இடத்திலும் அதிமுகவுக்கு ஓட்டு போடுங்க என்று சொல்லவே இல்லை.
அதிமுக கட்சி ஜெயித்த பிறகு எல்லோரும் வாழ்த்து சொல்வது போல தான் நானும் விஜயும் ஜெயலலிதாவை நேரில் சென்று சந்தித்தோம். நான்தான் அப்போது கூட விஜய் அழைத்து சென்றேன். ஜெயலலிதா எங்களுக்கு நன்றி சொன்னார்கள், நாங்கள் மூவரும் தனியாக பேசினோம் என்றார். அதோடு ஒரு கல்யாண வீட்டில் தான் ஜெயலலிதா மற்றும் விஜய் இருவரும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டதாகவும் அப்போது கூட அவர்கள் எதுவும் பேசவில்லை என்றார். மேலும் ஜெயலலிதாவை விஜய் நேரில் சந்தித்தாரா என்று அப்போது ஆட்சியில் இருந்த அமைச்சர்கள் மற்றும் அந்த கட்சியில் இருப்பவர்களையே சொல்ல சொல்லுங்கள் என்று கூறினார்.
“தலைவா பட பிரச்சனையின் போது
விஜய் ஜெயலலிதாவை சந்திக்கவே இல்லை
வெறும் வீடியோ மட்டுமே வெளியிட்டார் ”-SAC
ஜெயலலிதாவை சந்திக்க கொடநாடு சென்றார் என்பது மீடியாவின் உருட்டு ..வீடியோ ஆதாரமும் கிடையாது pic.twitter.com/b5SEvT7iZP
— மிஸ்டர் கமாண்டர் (@UFTVcommanders) April 20, 2026
“>
