நடிகை பூஜா ஹெக்டே தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள சமீபத்திய வீடியோ இணையதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது. ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் எடுக்கப்பட்ட அந்த வீடியோவில், நடிகர் விஜய் அரசியலுக்கு வந்து முதலமைச்சராகப் பதவியேற்பதை தான் முன்பே கணித்ததாக அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் “விஜய் சார் முதலமைச்சர் ஆவதை நான் முன்பே சரியாகக் கணித்துவிட்டேன் இப்போது உங்கள் கனவுகள் நனவாகியிருப்பதற்கு மனமார்ந்த வாழ்த்துகள்!” என பூஜா பதிவிட்டுள்ள செய்தி, தளபதி ரசிகர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் படப்பிடிப்பின் இடைவேளையில் விஜய்யுடன் உரையாடிய நினைவுகளைப் பகிர்ந்துள்ள பூஜா, அவரது மக்கள் செல்வாக்கையும் ஆளுமையையும் வைத்தே இந்த மாற்றத்தை உணர்ந்ததாகத் தெரிவித்துள்ளார். சினிமாவைத் தாண்டி மக்கள் பணியில் தடம் பதித்துள்ள விஜய்க்கு திரையுலகினர் பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், பூஜா ஹெக்டேவின் இந்தப் பதிவு ஒரு தீர்க்கதரிசனமான கருத்தாகப் பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் விஜய்யின் அரசியல் வருகையும், அவர் தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள வரலாற்றுச் சாதனையும் இந்திய அரசியலில் ஒரு புதிய அத்தியாயமாக அமைந்துள்ளதாக அவர் அந்த வீடியோவில் பாராட்டியுள்ளார்.
