தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் நேற்று திருமாவளவன் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதற்கு திமுக கூட்டணியின் அழுத்தம் தான் காரணம் என்று கூறினார். இதற்கு விசிக கட்சியின் எம்எல்ஏ ஆளூர்‌ ஷாநவாஸ், இந்த விஜய் யார். அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள முடியாத அளவிற்கு எங்கள் தலைவருக்கு பிரஷர் இருப்பதாக கூறி திருமாவளவனை கொச்சைப்படுத்தி விட்டார் என்று கூறினார். அதோடு விஜய் ஒரு கூத்தாடி என்றும் கூறினார். இதற்கு தற்போது பதிலடி கொடுக்கும் விதமாக திருமாவளவன் பேசிய வீடியோவை இணையதளத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.

அதாவது கேப்டன் விஜயகாந்த் தமிழ்நாட்டின் முதல்வராக ஏன் மாறக்கூடாது என்று தொல் திருமாவளவன் கேட்டார். அதன் பிறகு ஒரு நடிகராக இருந்த எம் ஜி ஆர் தமிழகத்தின் முதல்வராக மாறிய நிலையில் மக்களுக்காகவும் சமூக நல அக்கறையுள்ள பல கருத்துகளையும் தன் திரைப்படங்கள் மூலம் கொடுத்து பல இளைஞர்களை கவர்ந்த விஜயகாந்த் எதற்காக முதலமைச்சர் ஆகக்கூடாது. சாப்பாடை கூட சிலர் பகிர்ந்து கொடுக்க மாட்டார்கள். அப்படி இருக்கும்போது கேப்டன் விஜயகாந்த் ஆட்சி அதிகாரத்தில் கூட்டணி கட்சிகளுக்கும் பங்கு உண்டு என்று கூறியுள்ளார். அதுவே மிகப்பெரிய விஷயம்தான். கேப்டன் விஜயகாந்த் முதலமைச்சர் ஆவது தான் இந்த திருமாவளவனின் விருப்பம் என்று பேசியுள்ளார். மேலும் இது தொடர்பான வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டு அவருடைய கட்சி எம்எல்ஏவுக்கு பதிலடி கொடுத்து வருகிறார்கள்.