தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய். தனது முதல் படங்களிலிருந்தே விமர்சனங்களையும் ட்ரோல்களையும் எதிர்கொண்டவர், இன்று மாஸ் ஹீரோவாக வளர்ந்துள்ளார்.
தற்போது அரசியலிலும் கால் பதித்துள்ள அவர், ‘தமிழக வெற்றிக்கழகம்’ என்ற கட்சியை தொடங்கி, 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகி வருகிறார். இவரது ரசிகர்கள் விஜயை முதலமைச்சராக உருவாக்கும் கனவில் கடுமையாக செயல்பட்டு வருகின்றனர்.
சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை விஜய்யின் நடனம், ஆக்ஷன் மற்றும் கதாபாத்திரங்களை கொண்டாடுகிறார்கள். சமீபத்தில் வெளிவந்த ‘GOAT’ திரைப்படம் விமர்சன ரீதியாக கலவையான வரவேற்பை பெற்றிருந்தாலும், வசூல் ரீதியாக 100 கோடி ரூபாயை தாண்டி வெற்றிபெற்றதாக படக்குழு அறிவித்தது.
தற்போது விஜய், இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் ‘ஜனநாயகன்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்க, மமிதா பைஜு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
‘ஜனநாயகன்’ படத்தில் நடித்த மமிதா பைஜு, “அடுத்த வருட தேர்தல் முடிவை பொறுத்து தான் விஜய் திரையுலக தொடர்ச்சியைப் பற்றி முடிவெடுப்பார்” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. அரசியலில் முழு கவனம் செலுத்த திட்டமிட்டிருக்கும் விஜய்க்கு தற்போது ரசிகர்களிடையே ஆதரவு பெருகிக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், நடிகை ரம்பா சமீபத்தில் அளித்த பேட்டியில், “விஜய் மிகவும் பணிவானவர். ‘நினைத்தேன் வந்தாய்’ படத்தில் அவர் கனவு காண்பது போல் நடிப்பார். அவரிடம் ஒருபோதும் ஈகோ இருக்காது. லண்டன் போகும்போது கூட, எனக்கென்று ஏதாவது வாங்கவேண்டுமா என்று கேட்டவர் விஜய்தான்” என உருக்கமாக பகிர்ந்துள்ளார்.
