தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் டிரைலர் நேற்று வெளியிடப்பட்ட நிலையில் அண்மையில் ஆடியோ வெளியீட்டு விழாவும் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் அனைவரும் எதிர்நோக்கி காத்திருந்த நிலையில் வாரிசு திரைப்படம் ஜனவரி 11ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில் வாரிசு இசைவெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் எளிமையான தோற்றத்தில் பங்கேற்றதை இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்த் விமர்சித்தார். இது பேசுபொருளான நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வசந்த், “இவ்வளவு பெரிய ஸ்டாரை பொதுவெளியில் விமர்சிக்க தமிழ்நாட்டில் என்னை தவிர தமிழ்நாட்டுல பொதுவெளியில எழுத ஆள் இல்ல. சொல்ல வேண்டிய கட்டாயம் இருந்ததால் எழுதினேன். எதிர்ப்பு பற்றி கவலைப்படுவதில்லை” என விளக்கமளித்தார்.