
நடிகர் விஜய் ஏன் சூப்பர் ஸ்டார் என சீமான் காரணம் கூறியுள்ளார்.
வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கின்றார். பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு, கணேஷ் வெங்கட்ராம் உள்ளிட்ட பலர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படமும் வருகின்ற ஜன-11 தேதி ரிலீஸ் ஆகின்றது. இந்த நிலையில் வாரிசு திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற பேச்சு எழுந்தது. தயாரிப்பாளர் தில் ராஜு விஜய் தான் சூப்பர் ஸ்டார் என்றும் ரஜினிகாந்த் முன்னாள் சூப்பர் ஸ்டார் எனவும் பேசியிருந்தார். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். மேலும் பத்திரிக்கையாளர் பிஸ்மியும் விஜய் தான் சூப்பர் ஸ்டார் என கருத்து தெரிவித்தார்.
இந்த நிலையில் நடிகர் விஜய் தான் சூப்பர் ஸ்டார் என மீண்டும் சீமான் பேசியிருக்கிறார். சென்னையில் உள்ள சத்யா மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடிகர் ஜூனியர் எம்.ஜி.ஆர், ஐஸ்வர்யா தத்தா நடித்திருக்கும் இரும்பன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சீமான் எம்.ஜி.ஆர் சினிமாவுக்கு வந்தது எப்படி? அவர் பட்ட கஷ்டங்கள் என்னவென்பது குறித்து பேசினார். இதை அடுத்து பேசியபோது நடிகர் விஜய் நடிக்க வருவதற்கு அவர் அப்பா உதவி இருப்பார். ஆனால் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக விஜய் இருக்க அவரின் கடின உழைப்புதான் காரணம். விஜயின் நடனம் மிக அருமையானது. அவரை போல நடனம் ஆடுவதற்கு இந்தியாவிலேயே நடிகர் கிடையாது என புகழாரம் சூட்டியுள்ளார்.