தமிழகச் சட்டமன்றத்தில் நாளை நடைபெறவுள்ள தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில், அதிமுக எம்.எல்.ஏ-க்கள் சி.வி.சண்முகம் தரப்புக்கு ஆதரவு அளிக்க முன்வந்துள்ள நிலையில், அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ-வும் வழக்கறிஞருமான ஐ.எஸ்.இன்பதுரை ஒரு ‘லீகல்’ குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார்.

“அதிமுகவின் அதிகாரப்பூர்வ கொறடா (Whip) பிறப்பிக்கும் உத்தரவை மீறி யார் வாக்களித்தாலும், அல்லது வாக்கெடுப்பில் பங்கேற்காமல் நடுநிலை வகித்தாலும் அவர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்; அவர்கள் பதவியே பறிபோகும்” என எச்சரித்துள்ளார்.

தாங்கள் ஒரு தனி அணியாகச் செயல்படுவதாகக் கூறிக்கொண்டு தனியாகக் கொறடாவை நியமிக்க யாருக்கும் சட்டப்படி அதிகாரம் கிடையாது என்றும், அப்படிச் செய்யும் நியமனங்கள் செல்லாது என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறியிருப்பது, அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.