‘ஜன நாயகன்’ திரைப்பட விவகாரத்தில் நடிகர் விஜய்க்கு ஆதரவாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பகிரங்கமாகத் தனது ஆதரவைத் தெரிவித்துள்ள நிகழ்வு, தமிழக அரசியல் வட்டாரத்திலும், குறிப்பாக திமுக முகாமிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘பராசக்தி’ திரைப்படத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராகத் தவறான உள்நோக்கத்துடன் கூடிய காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகக் கூறி, அக்கட்சியினர் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர். ஏற்கனவே தமிழக அமைச்சரவையில் பங்கு கோரி காங்கிரஸ் எம்.பி.க்கள் மற்றும் மூத்த தலைவர்கள் போர்க்கொடி தூக்கி வரும் நிலையில், தற்போது எழுந்துள்ள இந்தத் திரைப்பட சர்ச்சைகள் திமுக – காங்கிரஸ் இடையிலான தேர்தல் கூட்டணியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராகுல் காந்தியின் இந்தத் திடீர் நிலைப்பாடு, வரும் தேர்தலில் புதிய அரசியல் மாற்றங்களுக்கு வித்திடுமா என்ற எதிர்பார்ப்பைத் தமிழக அரசியலில் கிளப்பியுள்ளது.