நடிகர் விஜய் அரசியல் குறித்த அறியாமையில் கருத்து தெரிவிக்கிறார் என அமைச்சர் கே.என். சேகர்பாபு கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். விஜய் அண்மையில் செய்த அரசியல் குறித்த பேட்டிக்கு பதிலளித்த அமைச்சர், “அவர் பாவம், நேற்று முந்தா நேற்று தான் அரசியலுக்கு வந்தார். அரசியல் பற்றி அவருக்கு என்ன தெரியும்?” என்றார். மேலும், “. தஞ்சை பெரிய கோவிலுக்கு ஆயிரமாண்டு விழா எடுத்தவர் கலைஞர்.சதய விழாவிற்கு அனுமதி அளித்தவர் முதல்வர் மு.க.ஸ்டாலின்,” எனவும் அவர் தெரிவித்தார்.
அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது: “சேக்கிழார் விழா, சித்தர்கள் விழா, அறிஞர்களுக்கான மரியாதை கொடுப்பது இந்த அரசு விஜய் பேசுவது அறியாமையில் தான். அதற்கெல்லாம் பதில் சொல்லி கொண்டு இருக்க தமிழக அரசிடம் நேரமில்லை. திமுக, பாஜக நாடகமாடுகிறது என விஜய் கூறிய நிலையில் அதற்கு பதில் கூறும் விதமாக ; விஜய் விரும்பினால் பாஜக நாடகத்தில் அவர் கலந்து கொள்ளலாம். அவருக்கு அரசு தரும் பாதுகாப்புகள் எதற்காக? நாடகத்துக்கு?… இது நாடகமா, அது நாடகமா என்பதை மக்கள் முடிவெடுப்பார்கள்,” என்றார்.
மேலும், மத்திய அரசின் கல்விக் கொள்கைகளை பற்றி கூறிய அமைச்சர், “ வர வேண்டிய மத்திய நிதி – ஒரு ரூபாய்கூட தமிழகத்திற்கு வரவில்லை. கடந்த வாரம் முதலமைச்சர் நேரடியாக பிரதமரிடம் கோரிக்கை வைத்தார். மத்திய அரசு இருமொழிக் கொள்கையை ஏற்காத மாநிலங்களை வஞ்சிக்கிறது. இதற்காக தமிழகம் பத்து ஆயிரம் கோடி நஷ்டம் வந்தாலும் சமாளிக்கத் தயாராக இருக்கிறது,” எனக் கூறினார். மத்திய அரசுக்கு துதி பாடுபவர்கள் இது போன்ற நிதியை பெற்று தர வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.
