கரூரில் நிகழ்ந்த நெரிசல் விபத்தில் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நேரில் ஆறுதல் கூற விஜய் திட்டமிட்டிருந்ததோடு, நிகழ்விடமான கரூருக்கு நேரடியாக செல்லவும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இருப்பினும், சந்திப்புக்கான இடத்தை தேர்வு செய்வதில் ஏற்பட்ட இழுபறி காரணமாக, யாரும் எதிர்பார்க்காத வகையில், விஜய் தற்போது அந்த குடும்பங்களை சென்னைக்கு வரவைத்து சந்திக்க தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த திட்ட மாற்றம், அவரது உணர்ச்சி சார்ந்த அணுகுமுறையையும், குடும்பங்களின் வசதியையும் கருத்தில் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
