அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் இணைக்க 10 நாட்கள் கெடு வழங்கப்பட்டதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, கட்சியின் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் மூத்த தலைவர் செங்கோட்டையன் இடையே கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டது. இதனால், இருவருக்கிடையே மோதல் உருவாகியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன. குறிப்பாக, 10 நாள் காலக்கெடு குறித்து எடுத்த முடிவு EPS அனுமதியின்றி எடுத்ததாக கூறப்படும் நிலையில், கட்சி உள்பட அனைத்து நிலைகளிலும் குழப்பம் நிலவியது.

இந்நிலையில், “நான் 10 நாள் கெடு விதிக்கவில்லை; என் கருத்து மீடியா தவறாகப் புரிந்துகொண்டார்கள்” என தெரிவித்து, செங்கோட்டையன் திடீர் ட்விஸ்ட் கொடுத்துள்ளார்.
இதனுடன், கடந்த சில நாட்களாக அரசியல் செயல்பாடுகளில் இருந்து ஓய்வெடுத்து அமைதியாக இருந்த செங்கோட்டையன், மீண்டும் அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையிலான அணியுடன் இணைந்து செயல்பட தயாராக உள்ளதாகவும், வரவிருக்கும் பொதுத் தேர்தல் பணிகளில் முழுமையாக ஈடுபட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இது, அதிமுகவின் உள்கட்சிச் சூழலை மாற்றும் முக்கிய முன்னோடியாகக் கருதப்படுகிறது
