த.வெ.க. தலைவர் நடிகர் விஜய் தொடர்ந்து பொதுவெளிகளில் தனது கருத்துகளை வெளியிட்டு வருகிறார். ஆனால், இவரது அரசியல் நிலைப்பாடு குறித்து கேள்விகள் எழுகின்றன என காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் விமர்சனம் செய்துள்ளார்.
சென்னையின் ஆவடி பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “விஜய் பேசுவதில் தெளிவு இல்லை. அவர் எந்த கொள்கையை பின்பற்றுகிறார் என்பதை இன்னும் மக்கள் புரிந்துகொள்ளவில்லை. அவரது பேச்சுகளில் ஆரம்பத்திலிருந்தே அரசியல் மாண்பு இல்லை. இது ஒரு குறையாகவே பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த மாதிரியான அரசியல் அணுகுமுறை தமிழக மக்களால் ஏற்கப்பட்டதில்லை. அவர் எதிர்காலத்திலும் பேசும் கருத்துகள் மக்களால் ஏற்கப்படும் என நான் நினைக்கவில்லை” எனக் குறிப்பிட்டார்.
