இந்தியா மற்றும் தைவானில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு விசா இல்லாமல் நுழைவதற்கு அனுமதி அளிக்க தாய்லாந்து முடிவு செய்துள்ளது. இந்த தளர்வுகள் நவம்பர் முதல் அடுத்த ஆண்டு மே வரை அமலில் இருக்கும் என்று தாய்லாந்து அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். சமீபத்தில், இந்தியா மற்றும் தைவானில் இருந்து வருபவர்கள் விசா இல்லாமல் 30 நாட்களுக்கு தாய்லாந்து செல்லலாம். இந்த ஆண்டு 28 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க தாய்லாந்து அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. சுற்றுலா பயணிகளை தங்கள் நாட்டுக்கு அன்புடன் வரவேற்பதாக அந்நாட்டு சுற்றுலாத்துறை அழைப்பு விடுத்துள்ளது.