நடிகர் விக்ரம் நடிப்பில் ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் “துருவ நட்சத்திரம்”. இப்படத்தை கவுதம் மேனன் இயக்கி உள்ளார். இதில் கதாநாயகியாக ரீத்து வர்மா நடித்திருக்கிறார். மேலும் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ் உட்பட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர்.

இந்த படத்தின் வேலைகள் கடந்த 2017ம் வருடத்தில் தொடங்கப்பட்டது. இதையடுத்து படத்தை 2018ல் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்த நிலையில், சில காரணங்களால் தள்ளிப்போகியது. அண்மையில் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் மும்முரமாக நடந்து வருவதாக படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு தெரிவித்திருந்தது. இந்த நிலையில் இப்படத்தின் பின்னணி இசையில் ஹாரிஸ் ஜெய ராஜ் தீவிரம் காட்டுகிறார். இதை அவர் தன் சமூகவலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளார். இப்பதிவால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.