தமிழ் சினிமாவில் கடந்த 40 வருடங்களாக சூப்பர் ஸ்டாராக ஜொலிப்பவர் ரஜினிகாந்த். இவர் அண்ணாத்த படத்திற்கு பிறகு தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு, தமன்னா, மோகன்லால் மற்றும் சிவராஜ் குமார் போன்ற பல பிரபலங்கள் நடித்து வருகிறார்கள். இந்த படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்திலும் நடிகர் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் லதா ரஜினிகாந்த் என்று திருமண நாளை கொண்டாடுகிறார்கள். கடந்த 1981-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ஆம் தேதி திருப்பதி கோவிலில் ரஜினி மற்றும் லதா ரஜினிகாந்த் திருமணம் நடைபெற்றது. மேலும் லதா ரஜினிகாந்த் மற்றும் ரஜினிகாந்துக்கு இன்று இணையதளம் மூலமாக ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.