சமூக ஊடகங்களில் லைக்ஸ் மற்றும் பார்வைகளைப் பெறுவதற்காக இளைஞர்கள் தங்களின் உயிரைப் பணயம் வைத்து ஆபத்தான ஸ்டண்டுகளில் ஈடுபடுவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில், பார்ப்போரை அதிர்ச்சியடையச் செய்யும் ஒரு வீடியோ தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

இந்த வீடியோவில், ரயில் நிலையம் ஒன்றின் பிளாட்பாரத்தில் ஒரு ரயில் நின்றுகொண்டிருக்க, அங்கிருந்த சில பயணிகள் தண்டவாளத்தில் இறங்கியுள்ளனர். அப்போது மற்றொரு பாதையில் அதிவேகமாக ஒரு ரயில் வருவதைக் கண்டு, பெரும்பாலான பயணிகள் உடனடியாக விலகி தப்பி ஓடினர். ஆனால், ஒரு வாலிபர் மட்டும் சற்றும் பயமின்றி, வேகமாக வரும் ரயிலுக்கு நேராக தண்டவாளத்திலேயே நின்று கொண்டு ஹீரோத்தனம் காட்ட முயன்றார்.

“>

மேலும் ரயில் தன் மீது மோதுவதற்கு சில அங்குல தூரமே இருந்த கடைசி நொடியில், அந்த வாலிபர் சாதுரியமாக தண்டவாளத்தில் இருந்து பக்கவாட்டில் குதித்து உயிர் தப்பினார். ஒரு நொடி தாமதித்திருந்தாலும் அவரது உயிர் பிரிந்திருப்பது நிச்சயம். அங்கிருந்த ஒரு பயணி இந்த முட்டாள்தனமான செயலை தனது கேமராவில் பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் எக்ஸ் தளத்தில் என்ற கணக்கில் பகிரப்பட்ட இந்த வீடியோவை நெட்டிசன்கள் பலரும் கடுமையாக சாடி வருகின்றனர். இதுபோன்ற பொறுப்பற்ற மனிதர்களால் ரயிலை இயக்கும் அப்பாவி ஓட்டுநர்கள் வாழ்நாள் முழுவதும் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடுகிறது என்றும், இந்த வாலிபர் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் தங்களின் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.