நியூயார்க் நகரின் முதல் இஸ்லாமிய மேயராகப் பதவியேற்றுள்ள ஜோஹ்ரான் மம்தானிக்கு வாழ்த்துச் சொல்லப்போய், பிரபல நடிகை எமிலி ரதாஜ்கோவ்ஸ்கி பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். மேயருக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் விதமாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ஒரு கடையின் உள்ளே அரைகுறை ஆடையுடன் கவர்ச்சியாக நடனமாடும் வீடியோவை முதலில் பகிர்ந்துள்ளார். ஆனால், அதற்கு அடுத்ததாகவே அபுதாபியில் உள்ள புகழ்பெற்ற ஷேக் சயீத் மசூதியில் பர்தா அணிந்து எடுத்த புகைப்படத்தையும் இணைத்திருந்ததுதான் விபரீதமாக முடிந்துள்ளது.

​ஒரே பதிவில் ஆபாசமான நடனத்தையும், புனிதமான மசூதி புகைப்படத்தையும் சேர்த்து வெளியிட்டது இஸ்லாமிய மக்களின் உணர்வுகளைக் காயப்படுத்துவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. “இது மத நம்பிக்கையை அவமதிக்கும் செயல்” என்று இணையவாசிகள் எமிலியை மிகக் கடுமையாகச் சாடி வருகின்றனர். மேயருக்கு வாழ்த்துச் சொல்லும் நல்ல நோக்கத்தில் செய்தாரா அல்லது கவனத்தை ஈர்க்க இப்படிச் செய்தாரா எனத் தெரியாமல், தற்போது இந்தப் பதிவு உலகம் முழுவதும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.