தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகர் விஜய் வம்சி இயக்கத்தில், தில் ராஜு தயாரிப்பில் நடித்துள்ள வாரிசு திரைப்படம் கடந்த 11-ஆம் தேதி ரிலீசாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதேபோன்று தல அஜித் எச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் நடித்துள்ள துணிவு திரைப்படமும் கடந்த 11-ஆம் தேதி ரிலீஸ் ஆகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் வாரிசு மற்றும் துணிவு திரைப்படங்கள் ரிலீஸ் ஆகி தற்போது 3 வாரங்கள் கடந்துள்ள தமிழகத்தின் வசூல் நிலவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி 3 வாரம் முடிவில் நடிகர் விஜய்யின் வாரிசு படம்  280 கோடி வசூலித்துள்ளது. இதே போன்று நடிகர் அஜித்தின் துணிவு படம் 3 வாரங்கள் முடிவில் 230 கோடி வசூலித்துள்ளது. மேலும் 2 திரைப்படங்களும் ஆரோக்கியமான வசூலை அடைந்து வருவதால் பட குழு மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.