தாய்லாந்தில் நடைபெற்று வரும் 2026-ஆம் ஆண்டிற்கான ‘மிஸ் கிராண்ட் தாய்லாந்து’ அழகிப் போட்டியில் யாரும் எதிர்பார்க்காத ஒரு தர்மசங்கடமான சம்பவம் அரங்கேறியுள்ளது.

பதும் தானி மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட கமோல்வான் சனாகோ என்ற அழகி, மேடையில் நின்றபடி தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தார். அப்போது அவர் பேசிக்கொண்டிருக்கும் போதே, எதிர்பாராத விதமாக அவரது மேல்தடை ‘செட் பல்’ (Veneers) திடீரென கழன்று கீழே விழப்பார்த்தது.

 

View this post on Instagram

 

A post shared by Phukkad (@p_2kkad)

ஒரு நிமிடம் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். ஆனால், சற்றும் பதற்றமடையாத கமோல்வான், கேமராக்கள் தன்னை படம் பிடித்துக் கொண்டிருப்பதை உணர்ந்தும், மிக சாதுர்யமாக அந்தப் பல் செட்டை எடுத்து அப்புறப்படுத்திவிட்டு, புன்னகையுடன் தனது அறிமுக உரையைத் தொடர்ந்தார்.

அந்த இக்கட்டான சூழலிலும் அவர் காட்டிய தன்னம்பிக்கையும், அழகிய நடையும் அங்கிருந்தவர்களின் பலத்த கைதட்டலைப் பெற்றது. இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.

“இது மிகவும் சங்கடமான விஷயம்” என ஒரு தரப்பினர் கமெண்ட் செய்தாலும், “அந்தச் சூழலை அவர் கையாண்ட விதம் சூப்பர், இதுதான் உண்மையான அழகு” எனப் பலரும் அந்த அழகியைப் பாராட்டி வருகின்றனர்.