ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை மனதாரப் பாராட்டியிருப்பது சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

சமீபத்தில் பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் உரையாடிய ட்ரம்ப், இந்தியாவுடனான தங்களது நீண்டகால நட்புறவை நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்துள்ளார். குறிப்பாக, மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மற்றும் உலகளாவிய எரிபொருள் தட்டுப்பாடு போன்ற இக்கட்டான சூழலில், மோடியும் தானும் இணைந்து எந்த ஒரு சிக்கலுக்கும் சுலபமாகத் தீர்வு கண்டுவிடுவோம் என ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

எரிபொருள் தட்டுப்பாட்டைச் சமாளிக்க இந்தியா எடுத்து வரும் முயற்சிகளையும், அமைதி காக்க வேண்டும் என்ற இந்தியாவின் தெளிவான நிலைப்பாட்டையும் ட்ரம்ப் உன்னிப்பாகக் கவனித்து வருகிறார்.

“நானும் நரேந்திர மோடியும் ஒன்று சேர்ந்தால் முடியாதது எதுவுமில்லை” என ட்ரம்ப் கொடுத்த இந்த ‘மாஸ்’ ஸ்டேட்மென்ட், அமெரிக்கா – இந்தியா இடையிலான உறவு எந்த அளவிற்குப் பலமாக இருக்கிறது என்பதை மீண்டும் ஒருமுறை உலக நாடுகளுக்கு உணர்த்தியுள்ளது.