மே 1ஆம் தேதியான இன்று உழைப்பாளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து அரசியல் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் மே தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு மே தின பூங்காவில் உள்ள நினைவுச் சின்னத்திற்கு சிவப்பு சட்டை அணிந்து வந்து முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், திமுக அரசு கொண்டு வந்த 12 மணி நேர வேலை சட்டத்தை திமுக தொழிற்சங்கமே எதிர்த்ததை பாராட்டுகிறேன். திமுக ஜனநாயக இயக்கம் என்பதற்கு இதுவே ஒரு எடுத்துக்காட்டு. திமுக பொதுவுடைமை சிந்தனைகளால் உருவானது என கூறிய முதல்வர் 12 மணி நேர வேலை மசோதா வாபஸ் பெறப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.