அரசு பள்ளி மாணவர்களுக்கு உதவுவதற்காக தமிழக பள்ளி கல்வித்துறையானது பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. பள்ளி மாணவர்கள் இடைநிற்றல், உதவித்தொகை போன்ற பல திட்டங்களின் மூலமாக மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு இறுதி தேர்வுகள் முடிவடைந்துள்ளதால் மாணவர்கள் தங்களுடைய வாழ்க்கையை தீர்மானிக்கும் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். அதாவது பத்தாம் வகுப்பு படித்தவர்கள் 11ஆம் வகுப்பில் தேர்வு செய்யும் பாடங்களை பொருத்துதான் கல்லூரியில் படிக்கும் துறையை தேர்ந்தெடுக்க முடியும்.

தனியார் பள்ளி மாணவர்கள் இது குறித்த விழிப்புணர்வை பெற்றுள்ளனர் ஆனால் அரசு பள்ளி மாணவர்கள் இது குறித்து விழிப்புணர்வு ஏதும் பெறவில்லை. இதனால் அரசு பள்ளி மாணவர்களுக்கு உயர் கல்வி குறித்த விழிப்புணர்வை அளிக்க அனைத்து பள்ளியிலும் தலைமை ஆசிரியர் தலைமையில் எட்டு பேர் கொண்ட குழு அமைக்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்காக இணையதள இணைப்பையும் அதிகார இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.