மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், மதுரை சித்திரை திருவிழாவில் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கூடுவார்கள் என்பதால் இதனை காலத்தில் கொண்டு தொற்று நோய் பாதிப்பு வராத வண்ணம் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருவிழாவை முன்னிட்டு மதுரையில் குடிநீர் சுகாதாரமாக வழங்க ஆய்வு குழு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் 20 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தது. இந்த வருடம் 56 இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்படும்அத்தகைய மருத்துவமனைகள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும். திருவிழாவின் போது மண்டகப் படிகளில் அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்குபவர்கள் இணையதளத்தின் மூலமாக விண்ணப்பங்களை பெற்று மதுரை மாவட்டம் உணவு பாதுகாப்புத்துறையின் அனுமதி பெற்று மட்டுமே கடைகளை இயக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. உணவுப் பொருட்கள் ஏதேனும் குறை இருந்தால் பொதுமக்கள் நேரடியாக 9444042333 என்ற செல்போன் எண்ணுக்கு புகார் அளிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்