ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் நகரின் வானில் ஆயிரக்கணக்கான காகங்கள் கூட்டமாகச் சூழ்ந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வானையே மறைக்கும் அளவுக்குக் கருப்பு மேகம் போலக் காகங்கள் வட்டமிடுவதைப் பார்த்த மக்கள், இது ஏதோ பெரிய பேரழிவு வரப்போவதற்கான அறிகுறியோ என்று அஞ்சி நடுங்குகின்றனர்.
குறிப்பாக, பைபிளில் கூறப்பட்டுள்ள சில வசனங்களோடு ஒப்பிட்டு, இது உலக அழிவின் தொடக்கமோ அல்லது போரில் ஏற்படப்போகும் மிகப்பெரிய உயிர்ச் சேதத்தைக் குறிக்கிறதோ எனச் சமூக வலைதளங்களில் விவாதங்கள் அனல் பறக்கின்றன.
ஆனால், பறவையியல் வல்லுநர்கள் இதைக் கண்டு அச்சப்படத் தேவையில்லை என்றும், இது பறவைகளின் வழக்கமான இடப்பெயர்வு காலம் (Migration) என்றும் விளக்கம் அளித்துள்ளனர்.
மார்ச் மாத காலங்களில் ஐரோப்பாவை நோக்கிச் செல்லும் லட்சக்கணக்கான பறவைகள் இஸ்ரேல் வழியாகக் கடந்து செல்வது வழக்கம் தான் என்றாலும், போர்ச் சூழலுக்கு நடுவே இந்தத் திடீர் நிகழ்வு இஸ்ரேலியர்களிடையே ஒருவித இனம் புரியாத பயத்தை விதைத்துள்ளது.
