திருபத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வட்டம் மற்றும் நகர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் வாணியம்பாடி காய்கறி சந்தைக்கு அருகே ஐய்யப்பன் என்பவர் நேற்று தைப்பூச திருவிழாவை முன்னிட்டு அங்குள்ள பொதுமக்களுக்கு வேட்டி சேலை வழங்குவதற்காக டோக்கன் விடியோகித்தார். அந்த டோக்கனை வாங்குவதற்கு ஏராளமான பொதுமக்கள் கூடியதால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டு 4 பெண்கள் கூட்டத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் 4 பெண்கள் உயிரிழப்புக்கு தி.மு.க அரசு பொறுப்பேற்க வேண்டும் என இபிஎஸ் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனியார் நிறுவனம் வழங்கும் சேலைகளை வாங்க கூடிய கூட்டத்தில் 4 பெண்கள் உயிரிழந்துள்ளனர். பொங்கலுக்கு  அரசு விலை இல்லா வேட்டி, சேலையை வழங்கி இருந்தால் தனியார் நிகழ்வில் அவர்கள் கூடியிருக்க  இருக்க மாட்டார்கள். இதற்கு காரணமான அதிகாரிகள், நிகழ்ச்சி நடத்தியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.