உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் திறந்து வரும் புதுவிதமான அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அதன்படி சமீபத்தில் புதுப்பிக்கப்பட்ட மெட்ரீயல் டிசைன் உடன் 3 UI ஆண்ட்ராய்டு 2.23.13.16 அப்டேட்டின் மூலம் புதிய பயனர் இடைமுகத்தை whatsapp நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த புதிய அம்சம் மூலமாக செயலியில் பச்சை நிறத்தை நீக்கிவிட்டு புதிய நிறம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

வாட்ஸ் அப் லோகோவின் மட்டும் பச்சை வண்ணம் இருக்கும். தற்போது செயலியின் மேற்புறத்தில் இருக்கும் ஸ்டேட்டஸ் இருக்கு செல்லும் தேர்வுகள் புதிய பதிப்பில் பயன்பாட்டின் அடிப் புறத்தில் இருக்கும். பில்டர் பயன்பாட்டில் புதிய விருப்பங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அதில் unread all, personal and business போன்ற விருப்பங்கள் இருக்கும். ப்ரோபைல் ஐகானை பயன்பாட்டில் மேற்புறத்தில் சேர்த்துள்ளதாகவும் சர்ச் பார் மேலே கேமரா ஐகான் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதுப்பிக்க பட்ட செயலியின் பயன்பாடு விரைவில் அனைவரின் பயன்பாட்டுக்கும் கிடைக்க உள்ளதாக வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.