
அனைத்து தொலைத்தொடர்பு செயலிகளுக்கும் முன்னோடியாக விளங்கி வருவது வாட்ஸ்அப் தான். ஆரம்பத்தில் மிகவும் குறைந்தளவிலான பயன்பாடுகளை மட்டும் கொண்டு செயல்பட்டு வந்த இச்செயலி, அதிக பயனர்களை பெற்ற பிறகு அடிக்கடி புது அப்டேட்களை அறிமுகப்படுத்த தொடங்கி உள்ளது. அதிக அளவுகொண்ட கோப்புகளை கூட ஈஸியாக அனுப்பும் அளவிற்கு இப்போது சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
அதன்படி தற்போது ஒரு புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அந்த வகையில் நீண்ட நாட்களாக பயனர்கள் எதிர்பார்த்த தனிப்பட்ட சாட்களை லாக் செய்துகொள்ளும் அம்சமானது அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. வாட்ஸ்அப் செயலுக்கு என்று உள்ள லாக் அம்சத்தை தவிர்த்து குறிப்பிட்ட சாட்களை மட்டும் லாக் செய்ய முடியும்.
இப்படி லாக் செய்யப்படும் சாட்கள் இன்பாக்சிலிருந்து வெளியேற்றப்பட்டு தனி கோப்புகளில் சேமிக்கப்படும். இதற்குரிய உங்களின் தனிப்பட்ட பாஸ்வேர்டு (அ) பயோமெட்ரிக் ஆகியவற்றின் வாயிலாக தான் இதை நாம் அணுக முடியும். இதன் வாயிலாக மிகவும் தனிப்பட்ட மற்றும் பாதுகாக்கப்பட வேண்டிய நம் சாட்கள் பாதுகாப்பாக வைக்கமுடியும்.