உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செய்தியை பயன்படுத்தி வருகின்றனர். அதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் தினம் தோறும் புதுவிதமான அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அவ்வகையில் தற்போது வாட்ஸ் அப் செயலியில் சாட் ஹிஸ்டரியை பாதுகாப்பாக வைத்திருக்க chat lock என்ற புதிய அம்சத்தை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

Finger print அல்லது password மூலமாக இதனை லாக் செய்து கொள்ளலாம். பயணர்களின் அனுமதி இல்லாமல் வெளிநபர்கள் யாரேனும் வாட்ஸ் அப்பை திறந்து பார்த்தாலும் குறிப்பிட்ட லாக் செய்து வைக்கப்பட்டுள்ள சாட்டை அவர்களால் காண முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.