இந்தியாவில் அதிக பயனர்களை கொண்ட எஸ்பிஐ வங்கி ஆண்டுதோறும் டெபிட் கார்டுகளுக்கு குறைந்தபட்சம் 125 வசூல் செய்கிறது. இந்தத் தொகை வங்கியில் இருந்து தானாகவே டெபிட் செய்யப்படும். 125 ரூபாயுடன் ஜிஎஸ்டி சேர்ந்து மார்ச் மாதத்தில் 147.5 டெபிட் செய்யப்படுகிறது. இந்தத் தொகை ஒவ்வொரு வகையான கார்டு வைத்திருப்பவர்களை பொறுத்து மாறுகிறது.

பரிவர்த்தனை செய்யாமல் தங்கள் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டதாக செய்திகள் வருவதால் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் கவலையடைந்துள்ள நிலையில் இது குறித்து விளக்கம் அளித்துள்ளனர். நீங்களும் அக்கவுண்ட்டை செக் பண்ணி பாருங்க.