இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.  அதன்படி நடப்பாண்டிற்கான இளநிலை நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஏப்.15 வரை தேசிய தேர்வு முகமை மேலும் அவகாசம் வழங்கியுள்ளது.

இதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவு பெறும் நிலையில், தற்போது கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. neet.nta.nic.in.என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவல்களை 011-40759000 என்ற தொலைபேசி எண் (அ) [email protected] என்ற மின்னஞ்சல் வாயிலாக தொடர்பு கொண்டு பெறலாம்.