கேரளாவில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா கால்பந்து அணி விளையாடும் என்று ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. இதற்காக சுமார் 250 கோடி ரூபாய் வரை ஸ்பான்சர்கள் மூலம் திரட்டப்பட்டு, அர்ஜென்டினா கால்பந்து சம்மேளனத்திற்கு கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஆனால், பணத்தைப் பெற்றுக்கொண்ட பிறகு, திட்டமிட்டபடி போட்டியில் விளையாட வராமல் அர்ஜென்டினா அணி ஏமாற்றிவிட்டதாக கேரள விளையாட்டுத் துறை அமைச்சர் வி. அப்துரஹிமான் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

இது வெறும் ஏமாற்றம் மட்டுமல்ல, அர்ஜென்டினா அணி செய்த மிகப்பெரிய “துரோகம்” என்று சாடியுள்ள அவர், இதேபோல் மேலும் ஐந்து நாடுகளையும் அந்த அணி ஏமாற்றியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

கேரள ரசிகர்களின் உணர்வுகளோடு விளையாடிய அர்ஜென்டினா அணி மீது இழப்பீடு கோரி சட்டப்பூர்வமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாகவும் அவர் அதிரடியாக அறிவித்துள்ளார்.