அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் ஒரு மாதத்தைக் கடந்தும் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரானின் கராஜ் நகரையும் தெஹ்ரானையும் இணைக்கும் பிரம்மாண்டமான பாலத்தை அமெரிக்கப் படைகள் நேற்று இரவு தகர்த்துள்ளன.
இது தொடர்பான வீடியோவை வெளியிட்ட டொனால்ட் டிரம்ப், ஈரான் பெரும் அழிவைச் சந்திப்பதற்கு முன் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என்றும், இல்லையெனில் அந்நாடு கற்காலத்திற்கே தள்ளப்படும் என்றும் எச்சரித்துள்ளார். அடுத்த இரண்டு வாரங்களுக்குத் தாக்குதல்கள் இன்னும் கடுமையாக இருக்கும் என அமெரிக்கா தெரிவித்துள்ளதால் மத்திய கிழக்கில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் இந்த அதிரடித் தாக்குதலுக்குப் பதிலடியாக, வளைகுடா நாடுகளில் உள்ள 8 முக்கியப் பாலங்களைத் தகர்க்கப்போவதாக ஈரான் பகிரங்கமாக அறிவித்துள்ளது. ஈரானின் இந்தப் பட்டியலில் குவைத்தின் கடல் பாலம், சவூதி அரேபியா – பஹ்ரைனை இணைக்கும் கிங் ஃபஹ்த் பாலம் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் புகழ்பெற்ற பாலங்கள் இடம்பெற்றுள்ளன.
பழிக்குப்பழி வாங்கும் நோக்கில் ஈரான் எடுத்துள்ள இந்த முடிவால், வளைகுடா நாடுகள் முழுவதும் போர் பதற்றம் உச்சத்தைத் தொட்டுள்ளதுடன், உலக நாடுகளும் பெரும் கவலையடைந்துள்ளன.
