தேர்தல் நெருங்கி வருவதால் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்பதை அறிய பலர் முயற்சிக்கின்றனர். இதற்கு https://voters.eci.gov.in என்ற இணையதளத்தில் வாக்காளர் பட்டியலில் உள்ள தேடல் என்பதை கிளிக் செய்து EPIC/விவரங்கள்/ மொபைல் எண் மூலம் எளிதாக பார்க்கலாம். Voter helpline ஆப் மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம். பட்டியலில் பெயர் இல்லையென்றால் தாசில்தார் அலுவலகத்தில் படிவம் 6 மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.