பொதுத் தேர்தலை வெளிப்படை தன்மையுடன் நடத்த மத்திய தேர்தல் ஆணையம் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகின்றது. வாக்காளர்கள் தங்கள் தகவல்களை அறிந்து கொள்வதற்கு வாக்காளர் ஹெல்ப் லைன் ஆப் VHA என்ற சிறப்பு அமைப்பை தேர்தல் ஆணையம் உருவாக்கியுள்ளது.

வாக்காளர் பதிவுக்கான விண்ணப்பங்களும் இதில் அடங்கும். இந்த செயலி மூலம் வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா இல்லையா என்பதை எளிதாக தெரிந்து கொள்ள முடியும். இந்த செயலியை கூகுள் பிளே ஸ்டோர் உள்ளிட்ட தளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.