இணைய வழி வர்த்தக தளமான அமேசான் தனது விற்பனையாளர்களுக்கான புதிய கட்டண முறைகளை ஏப்ரல் 7ம் தேதி முதல் அமல்படுத்த உள்ளது. அதன்படி நீண்ட கால கிடங்கு கட்டணம், திருப்பி அனுப்பப்பட்ட பொருட்களுக்கான பணத்தை அளிப்பதற்கான கட்டணம் உள்ளிட்ட பல்வேறு கட்டணங்களை உயர்த்த உள்ளது. இந்த கட்டிடம் உயர்வால் அமேசான் மூலமாக விற்கப்படும் பொருட்களின் விலை 5 சதவீதம் முதல் 11 சதவீதம் வரை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.