தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் (Toll Gates) கட்டணத்தை உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த புதிய கட்டண உயர்வு வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள மொத்தம் 66 சுங்கச்சாவடிகளில் இந்த கட்டண உயர்வு அமல்படுத்தப்படுகிறது. வாகனங்களின் வகையைப் பொறுத்து 5% முதல் 7% வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

அதன்படி தனியார் வாகனங்களுக்கான (Private Vehicles) வருடாந்திர FASTag பாஸ் கட்டணம் தற்போதுள்ள ரூ. 3000-லிருந்து ரூ. 3075-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் (NHAI) இந்த அறிவிப்பு ஏப்ரல் 1, 2026 முதல் மாநிலம் முழுவதும் செயல்பாட்டுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒவ்வொரு ஆண்டும் பணவீக்கத்தின் அடிப்படையில் சுங்கக்கட்டணங்கள் மாற்றியமைக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால், அத்தியாவசியப் பொருட்களின் விலை மற்றும் போக்குவரத்துச் செலவுகள் அதிகரிக்கக்கூடும் என்ற கவலை வாகன ஓட்டிகளிடையே எழுந்துள்ளது.