இந்திய அளவில் ஒப்பிடும்போது தமிழகத்தில் வாகன விபத்துக்கள் அதிக அளவு ஏற்படுவதால் அதனை தடுப்பதற்கு போக்குவரத்து காவல்துறை சில கட்டுப்பாடுகளை வெளியிட்டது. அதன்படி கோவை மாநகர காவல் துறை இருசக்கர வாகனங்களில் பயணம் செய்யும்போது வாகன ஓட்டிகள் மட்டுமில்லாமல் பின்னால் அமர்ந்து வாகனம் ஓட்டுபவர்களும் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய விதை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. தற்போது இந்த விதியை பொதுமக்கள் அனைவரும் கடைப்பிடிக்கிறார்களா என போக்குவரத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த விதியை கடைபிடிக்காதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதே சமயம் தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு பயிற்சியும் அளிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அதிக ஒலி எழுப்பும் ஹேர் ஹாரன் பைக்கில் பொறுத்து இருந்தால் அபராதம் விதிக்கப்படும் எனவும் வாகன ஓட்டிகளுக்கு காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.