தமிழகத்தில் பத்திரப்பதிவு துறையால் வழங்கப்படும் ஆவணங்களில் மாற்றங்களை செய்து பலரும் மோசடியில் ஈடுபடுகின்றனர். இதனை தடுக்கும் விதமாக திருமணம் மற்றும் சொத்து உள்ளிட்ட பதிவு சான்றிதழ்களை திருத்த இயலாத அளவிற்கு நிரந்தர ஆவணங்களாக மாற்ற தகவல் தொழில்நுட்பத் துறை சார்பாக நம்பிக்கை இணையம் என்ற தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மின்னணுமயமாக்கப்பட்ட ஆவணங்கள் முத்திரை இடுவதை நோக்கமாகக் கொண்டு செயல்படுவதால் இதனை முன் தேதியிட்டு மாற்றவோ அல்லது திருத்தவோ முடியாது.

அதே சமயம் ஒளிவருடன் செய்யப்பட்ட ஆவணங்களை சேமிப்பதன் மூலமாக மெய் தன்மை உறுதி செய்யப்படும். தற்போது ஆவணங்கள் அனைத்திலும் 2023 ஆம் ஆண்டு மே 1ஆம் தேதிக்கு பிறகு பதிவு செய்யப்பட்ட நம்பிக்கை இணையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பதிவு செய்யப்பட்ட அனைத்து ஆவணங்களையும் திருத்த இயலாத நிரந்தர ஆவணங்களாக மாற்ற பதிவுத்துறை ஐஜி உத்தரவிட்டுள்ளார்.