டிஎன்பிஎஸ்சி உதவி செய்லர் பிரிவில் 59 காலியிடங்கள் உள்ளதாக கடந்த ஏப்ரல் மாதம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு கடந்த மே மாதத்துடன் முடிவடைந்த நிலையில் வருகின்ற ஜூலை 1ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. தற்போது இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளதாகவும் தேர்வர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் அறிவித்துள்ளது.

இதற்கு முதலில் தேர்வர்கள் tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும். அதில் அசிஸ்டன்ட் ஜெய்லர் ஹால் டிக்கெட் என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு உங்களின் பதிவு எண் மற்றும் கடவு சொல்லை உள்ளிட்டு ஹால் டிக்கெட்டை பதிவு செய்து பிரின்ட் அவுட் எடுத்துக் கொள்ளலாம்.