தமிழகத்தில் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் கீழ் 1,078 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. இந்த பேருந்துகளில் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக அரசு பயணிகளுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி தற்போது பேருந்து கட்டணத்தில் 10 சதவீதம் சலுகை வழங்கப்பட்டுள்ளது. அதாவது பயணத்திற்கான டிக்கெட்டை முன்கூட்டியே ஆன்லைனில் பதிவு செய்யும்போது திரும்பி வருவதற்கான பயண சீட்டு கட்டணத்தில் 10 சதவீதம் சலுகை வழங்கப்படும்.

இந்த புதிய கட்டண சலுகை திட்டம் வருகின்ற ஆகஸ்ட் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை தொடர்ந்து இதுவரை 9,351 பேர் 10 சதவீதம் கட்டண சலுகை திட்டத்தில் பயனடைய முன்பதிவு செய்துள்ளனர். இதற்கு முன்னதாக அரசு விரைவு பேருந்து கழகம் 50 சதவீதம் பயண கட்டண சலுகையை நடைமுறைப்படுத்தி வரும் நிலையில் அதன் தொடர்ச்சியாக தற்போது பத்து சதவீதம் கட்டண சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.