கோயில் நிகழ்ச்சியில் ஆபாச நடனம் நடைபெற்றால் விழா ஏற்பாட்டாளர்கள் மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும், இன்று இது குறித்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி, “கோயில் என்பது இறை வணக்க வழிபாட்டுக்குரிய இடம் கோவில் திருவிழாக்களின்போது ஆபாச நடனம் ஏற்பாடு செய்யப்பட்டால் ஏற்பாட்டாளர்கள் மீது பெண் வன்கொடுமை தடை சட்டம் பாயும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரித்துள்ளது.

வன்கொடுமை செய்யும் அளவிற்கு நடனங்கள் இருக்கும்போது சாதாரண வழக்குகளை ஏற்க முடியாது என்று நீதிபதி கூறியுள்ளார். வழிபாட்டு தலங்களில் ஆபாச நடனம் நடக்கும்போது போலீஸ் என்ன செய்து கொண்டிருந்தது என்றும் நீதிபதி கடுமையாக சாடியுள்ளார்.  மேலும், ஆபாச நடனம் குறித்து சாதாரண பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ததை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் கடுமையான நடவடிக்கை எடுக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.