சென்னையில் வேகமாக வாகனம் ஓட்டினால் அபராதம் விதிக்கப்படும் என காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார். பகலில் 40 கி.மீ வேகத்தை கடந்தும், இரவில் 50 கி.மீ வேகத்தை கடந்தும் வாகனம் ஓட்டிச் சென்றால் அதிவேக பயணம் என வழக்கு பதியப்படும் என்றும் இதற்காக ஸ்பீடு ரேடார் கருவி பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்டு வருவதாகவும், அதன் மூலம் தானியங்கி முறையில் வழக்குபதிவு செய்யப்படும் எனவும்  காவல் ஆணையர் நேற்று அறிவித்திருந்தார்.

இந்நிலையில் அந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அது தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. 6 கேமராக்கள் வேகத்தை கண்டறிந்து எச்சரிக்கை மட்டுமே செய்யும் என்றும், தானாக அபராதம் விதிக்கும் கேமராக்கள் இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது